இந்தியாவில் எம்ஐ நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.
ஷாவ்மி நிறுவனம் சமீபத்தில் எம்ஐ நோட் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகம் ஆகவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எம்ஐ 10i என்ற ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் பிளாக், நெபுலா பர்பிள், கிளாசியர் வைட் போன்ற நிறங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எம்ஐ 10i ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம். எம்ஐ 10i ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.47 இன்ச் அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 730G SoC பிராசசர் வசதியினைக் கொண்டும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 16 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5,260mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 30W ஃபாஸ்ட் சார்ஜ் – டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.