ஜியோமி, சீனாவில் புதிய Mi Notebook Pro 15 வினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Mi Notebook Pro 15 லேப்டாப், நவம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த லேப்டாப் வெப்ப மேலாண்மைக்கு dual fan அமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080p full HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
இது 1TB வரை உள்ளடக்க வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது Windows 10 operating system கொண்டு இயங்குகிறது. இந்த லேப்டாப்பின் விலை ரூ. 70,100 க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப், 15.6 இஞ்ச் full HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட அளவிலான டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
இது16GB RAM உடன் Nvidia GeForce MX250 GPU மற்றும் 1TB வரை உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டுள்ளது.
மேலும் இது, 10th Generation Intel Core i7-10510U SoC கொண்டு இயங்கும் தன்மையானது.
60Wh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் 1 மெகாபிக்சல் கேமரா மற்றும் யு.எஸ்.சி போர்ட் சி போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.