சியோமி நிறுவனம் செப்டம்பர் 9 ஆம் தேதி Mi Charge Turbo-வை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி இதனுடன் கூடுதலாக வெளியாக உள்ளது. Mi Charge Turbo 5G க்கானது என்ற தகவல்கள் உறுதியாகியுள்ளது.
Mi சார்ஜ் டர்போ செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை வெய்போவிந் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வயர்லெஸ் சார்ஜிங்கை வேகமான சார்ஜிங் வசதியுடன் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிகிறது.
Mi Mix 4 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியானது, அது உறுதிப்படுத்தப்பட்டு புதிய மி சார்ஜ் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகவுள்ளது.
100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பம் அதிவேகத்தில் சார்ஜ் செய்யும் வசதியினைக் கொண்டுள்ளதால் பெறும் வரவேற்பினைக் கொண்டுள்ளது.
மிக விரைவாக அதுவும் 17 நிமிடங்களில் 4,000mAh ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். ஆனால் ஒரு ரெட்மி ஸ்மார்ட்போனுடன் இந்த சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்பதை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை எதிர்நோக்கி பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.