சியோமி நிறுவனம், மி சிசி 9 ப்ரோவினை வருகிற நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 108MP பென்டா-கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சியோமி மி சிசி 9 ப்ரோ 6.40 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
இது 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இதில் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பின் கீழ் 32 எம்பி செல்பீ கேமரா போன்றவையும் உள்ளது.

மேலும் இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட் கொண்டதாகவும் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை, இது ஒரு 108 எம்பி அளவிலான ப்ரைமரி கேமராவினையும், டெலிஃபோட்டோ லென்ஸ், அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஒரு டோஃப் சென்சார் போன்றவைகளைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது5170 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.