Gadgets

விற்பனையைத் தொடங்கிய Mi Band 4!!

இன்று இந்தியாவில் சியோமியின் Mi Band 4, விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ‘ஸ்மார்ட்டர் லிவ்விங் 2020′ என்னும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் அதிரடியாக ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகமானது.

மேலும் கூடுதலாக எம்ஐ ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர், புதிய எம்ஐ தொலைக்காட்சிகள் போன்றவையும் அறிமுகமாயின.

மேலும் இதில் ஸ்விம் டிராக்கிங் வசதியும் உள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் உச்ச கட்டங்களாக டிவைஸ் ஃபைண்டர், ஸ்டாப்வாட்ச், அலார்ம், ஐடில் அலெர்ட், இன்கமிங் அழைப்பு அலெர்ட் போன்றவையும் இது கொண்டுள்ளது.

விற்பனையைத் தொடங்கிய Mi Band 4!!

இந்த எம்ஐ பேண்ட்டின் விலை  4, 2,299 ரூபாய் என தகவல்கள் உறுதியாகி இருந்தது. விற்பனை எப்போது துவங்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்க, அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், இன்று 12 மணி இதன் விற்பனை துவங்கியுள்ளது.

இந்த பேண்ட்  ஆமோலெட் டிஸ்ப்ளே, தண்ணீரை எதிர்கொள்ளும் தன்மை, 24 மணிநேரமும்  இதயத் துடிப்பினை கண்காணித்தல் மற்றும் தூக்கத்தினை கண்காணித்தல், 2.5டி டெம்பர்டு க்ளாஸ் பாதுகாப்பு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பட்ஜெட் விலையில் விற்பனைக்குத் தயாரான வு ஸ்மார்ட் டிவிக்கள்!

TechNews Tamil

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் டியுஎஃப்ஏ15 லேப்டாப் இந்தியாவில் வெளியீடு!!

TechNews Tamil

மார்ச் மாதம் வெளியாக உள்ள ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil