Mobile

ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகும் ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!!

‘Mi A3’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 21 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 21 அன்று மதியம் 12 மணிக்கு புது டெல்லியில் நடைபெறவுள்ளது.

ஸ்பெய்னில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்,  இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 64GB சேமிப்பு அளவு கொண்ட ‘Mi A3’ ஸ்மார்ட்போன் 19,200 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அதே நேரம் 128GB அளவு கொண்ட ஸ்மார்ட்போன், 21,500 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகும் 'Mi A3' ஸ்மார்ட்போன்!!

இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை, 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

Related posts

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 கேஷ்பேக் ஆஃபர் !

TechNews Tamil

ஹெச்டிசி நிறுவனத்தின் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்!

TechNews Tamil

இத்தாலியில் அறிமுகமானது அசுஸ் ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil