Mobile

இன்று அறிமுகமான ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!

‘Mi A3’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளது. ‘Mi A3’ ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்ச்சியானது இன்று மதியம் 12 மணிக்கு துவங்கியது.

இந்த ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ‘Mi A3’ ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ‘Mi A3’ ஸ்மார்ட்போன் 17,499 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

இன்று அறிமுகமான 'Mi A3' ஸ்மார்ட்போன்!

இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720×1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Related posts

ஓப்பன் சேல் விற்பனையினைத் துவக்கிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவு விலையில் அறிமுகமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil