சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான மெய்ஸூ அதன் Meizu 16T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ஆனது வருகிற அக்டோபர் 28 முதல் தொடங்குகிறது.
1. Meizu 16T இன் 6 ஜிபி + 128 ஜிபி வகை – ரூ.20,000
2. Meizu 16T இன் 8 ஜிபி + 128 ஜிபி வகை- ரூ.23,000
3. Meizu 16T இன் 8 ஜிபி + 256 ஜிபி வகை – ரூ .25,000

இது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான Flyme OS 7 கொண்டு இயங்குகிறது. இது 6.5 இன்ச் அளவிலான முழு எச்டி உடன் 1080 x 2232 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, இது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
இது 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டு உள்ளது.
முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவினைக்
கொண்டுள்ளது. இது 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டுள்ளது
4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இது ஒரு 5000mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.