சீனாவில் ஹுவாய் நிறுவனம் ஹுவாய் MatePad T8 டேப்லெட்டை வெளியிட்டு உள்ளது.
ஹுவாய் மேட்பேட் டி 8.8 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1200 x 800 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த டேப்லெட் IMG GE8320 650 GPU உடன் ஆக்டா-கோர் மீடியாடெக் MT8768 கொண்டு இடங்குவதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக நீட்டிப்பதாய் உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா உள்ளது மற்றும் முன்பக்கத்தில் 2 மெகாபிக்சல் கொண்ட கேமராவினைக் கொண்டுள்ளது.
ஹுவாய் MatePad T8 டேப்லெட் 5100 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. 75 மணிநேர ஆடியோ பிளேபேக்கினைக் கொண்டுள்ளது.
இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்டு EMUI 10.0.1 இயங்குவதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டேப்லெட்டில் எல்.டி.இ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யு.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.