அமேசான் நிறுவனம் வரும் 15,16 தேதிகளில் அமேசான் பிரைம் டே சேல் நடத்துவதாக அறிவிப்பினை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டது.
இந்த ஆஃபர் விற்பனையில், அமேசான் பிரைமில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் நிறைய பொருட்கள் வாங்க வேண்டினால், அமேசான் பிரைம் டே சேலில் வாங்கலாம்.

ஆனால், அந்தப் பயனைப் பெற அமேசான் பிரைம் சந்தாதாரராக பதிவு செய்திருக்க
வேண்டும். இல்லையேல்
ஆஃபரைப் பெற முடியாது.
இதற்கு மாதம் 129 ரூபாய் செலுத்த வேண்டும். ‘பிரைம் மெம்பர்’ ஆக மாறினால், ஃபாஸ்ட் டெலிவரி, கேஷ்பேக் ஆஃபர், உடனடி முன்பதிவு போன்றவற்றில் அதிகமான சலுகைகள் கிடைக்கும்.
வருகிற பிரைம் டே சேலில் நிறையப் பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஒவன் என வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளது. இதே
போல், அமேசான்
கிண்டல், கேமரா, வாட்ச் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாட்ச், ஷூ, டிரெஸ், பேக், என பேஷன் பொருட்களும் அமேசான் பிரைம் டே சேலில் கிடைக்கிறது.
சாம்சங், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் பிரைம் டே
சேலில் அதிக சலுகையில் வழங்கப்படவுள்ளது
குறிப்பிடத்தக்கது.