இந்தியாவில் லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் மாடல் ஆனது வெளியாகி உள்ளது, இந்த வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் இயர்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த இயர்போன் யுஎஸ்பி சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5 மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த இயர்போன் சிலிகான் நெக்பேண்ட் மற்றும் டைட்டானியம் அலாய் ஸ்டீல் கோர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த இயர்போன் 10 என்எம் ஒவர்சைஸ் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர்களை கொண்டுள்ளதாக உள்ளது. மேலும் இது கிளாரிட்டி மற்றும் பேஸ் வழங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த இயர்போன் சிவிசி 8.0 நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்ப வசதியினைக் கொண்டதாகவும், இந்த இயர்போன் ஆனது ப்ளூடூத் 5.0 வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 24மணி நேர பேக்கப் வழங்குவதாக உள்ளது.
இந்தியாவில் சவுண்ட்கோர் லைஃப் யு2 ப்ளூடூத் மாடல் விலை ரூ.2899-ஆக உள்ளது.