ஜியோ நிறுவனம் இந்தியாவில் கால் பதித்ததும், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல், ஏர்செல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் தடுமாறிப் போகின.
அதற்குக் காரணம் ஜியோ மிகவும் மலிவு விலையில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் என பலவிதமான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.
இதனால் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு விறுவிறுவென மாறினர். அதன்பின்னர் வேறு வழி இல்லாமல், ஏர்டெல், ஏர்செல், ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஜியோவுக்கு இணையாக சலுகைகளை அறிவித்தது.

தற்போது டிராய் அலைக்கற்றைக்கான நிலுவைத் தொகையினை செலுத்தக் கோரியதை அடுத்து, வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் விலை அதிகரிப்பினை அறிவித்து வருகின்றன.
இந்தநிலையில் ஏர்டெல் பலவிதமான சலுகைகளை அறிவித்து வருகின்றது, ஏர்டெல்லின் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டமானது, ஆயுள் காப்பீட்டு சலுகையினை வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இந்த ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மை, FUP வரம்பு இல்லாமல் வரம்பற்ற அழைப்பு சேவை, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான எச்.டி.எஃப்.சி லைஃப் வழங்கும் ஆயுள் காப்பீடு போன்ற வசதிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.