Mobile

தென் கொரியாவில் அறிமுகமான LG X2 (2019)!

LG நிறுவனம் அதன் X2 (2019) என்ற புதிய ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உடன், இந்த ஸ்மார்ட்போன் LG K 30 (2019) என்ற பெயரின் கீழ் இதர சந்தைகளில் அறிமுகமாகும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான LG X2 ஸ்மார்ட்போனின் மேம்பபட்ட பதிப்பு தான் LG X2 (2019) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


எல்ஜி எக்ஸ் 2 (2019) ஆனது கடந்த ஆண்டு வெளியான மாடலை போலவே எல்ஜியின் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக களமிறங்கி உள்ளது. இது தென் கொரியாவில் KRW 1,98,000-க்கு (இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.11,500/-க்கு) அறிமுகமாகியுள்ளது. அரோரா பிளாக் எனும் ஒற்றை நிறத்தின் கீழ் 2 ஜிபி அளவிலான ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு வேரியண்டில் வாங்க கிடைக்கும். 

தென் கொரியாவில் அறிமுகமான LG X2 (2019)!

எல்ஜி எக்ஸ் 2 (2019) ஸ்மார்ட்போனை அம்சங்களை பொறுத்தவரை, இது 720 x 1440 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 அளவிலான திரை விகிதத்தை கொண்ட 5.45 இன்ச் எச்டி+ ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பாப்-அப் மற்றும் நாட்ச் போன்ற சமீபத்திய ஸ்மார்ட்போன் ட்ரெண்ட் எதையும் ஏற்காமல், தடிமனான பெஸல்களை கொண்டுள்ளது. 


2 ஜிபி ரேம் உடனான மிகவும் பழைய 1.4GHz ஸ்னாப்டிராகன் 425 SoC கொண்டு இயங்குகிறது. மெமரி நீட்டிப்பை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி வழியாக 2TB வரை விரிவாக்கும் ஆதரவை வழங்குகிறது. எல்ஜி எக்ஸ் 2 (2019) ஸ்மார்ட்போனில் ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய 3,000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. 


எல்ஜி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவை வழங்குகிறது. இது Phase Detection Autofocus-ஐ ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்கான 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. 



Related posts

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் களமிறங்கிய மோட்டோ ஜி பவர்!!

TechNews Tamil

அசத்தலான மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ ஜி52ஜே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil