எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி W10 ஆல்ஃபா என்ற ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
எல்ஜி W10 ஆல்ஃபா என்ற ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 9,999
எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 720×1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 12ஜிபி வரை மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் UNISOC SC9863 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இந்த எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 8மெகாபிக்சல் சென்சார் கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை எல்ஜி W10 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் 3450எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத்,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.