Mobile

சீனாவில் அறிமுகமானது எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்!!

சீனாவில் எல்ஜி நிறுவனத்தின் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது. இந்த எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம். 

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது அட்ரினோ 630 GPU, மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது. 

Related posts

பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன்!

TechNews Tamil

அதிரடியாக வெளியானது Huawei Nova 5z!

TechNews Tamil

அறிமுகமானது கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ்!

TechNews Tamil