Mobile

அறிமுகமாகத் தயார்நிலையில் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன்!!

எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி வெல்வட் 5ஜி என்ற ஸ்மார்ட்போனை மே 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765எஸ்ஒசி சிப்செட் வசதியினையும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

அறிமுகமாகத் தயார்நிலையில் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன்!!

இந்த எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இது 4300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது5 ஜி இவைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஸ்பெயினில் அறிமுகமானது அட்டகாச ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

களமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil