Mobile

ரூ.26,830 விலையில் அறிமுகமானது எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன்!

எல்ஜி நிறுவனம் ஜப்பானில் எல்ஜி ஸ்டைல்3 என்னும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.26,830 (இந்திய மதிப்பில்)

எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.1 இன்ச் QHD உடன் ஒஎல்இடி டிஸ்பிளேவினையும், 3120 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசரஸ் வசதியுடன் அட்ரினோ 630ஜிபியு வசதி கொண்டுள்ளது.

ரூ.26,830 விலையில் அறிமுகமானது எல்ஜி ஸ்டைல்3  ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செகன்டரி கேமரா போன்றவற்றினையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5 எல்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி 2.0 மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட நுபியா Z20!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி நோட் 10 & நோட் 10 பிளஸ் இன் விலை நிர்ணயம் !

TechNews Tamil

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil