Mobile

தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ளது எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

எல்ஜி நிறுவனம் எல்ஜி Q92 ஸ்மார்ட்போனை தென்கொரியாவில் வெளியிட்டு உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எச்டி பிளஸ் பன்ச்ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் அது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி என்எம் பிராசஸர் வசதி கொண்டதாகவும் அட்ரினோ 765ஜி ஜிபியு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ளது எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிமைரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்ற அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அசரவைக்கும் சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனை!!

TechNews Tamil

அறிமுகமானது Panasonic Eluga Ray 810 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் அறிமுகமானது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil