Mobile

முதல் விற்பனையினைத் துவக்கிய LG Q51 ஸ்மார்ட்போன்!

LG Q51 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானது, இந்த ஸ்மார்ட்போன் இதன் முதல் விற்பனையினை, இன்று முதல் துவக்கி உள்ளது.

1.   LG Q51 ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.18,700

LG Q51, ஸ்மார்ட்போன் ஆனது HD + தெளிவுத்திறனுடன் 6.5 அங்குல டிஸ்பிளேவினையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.0GHz ஆக்டா கோர் பிராசசரைக் கொண்டதாக உள்ளது.

முதல் விற்பனையினைத் துவக்கிய LG Q51 ஸ்மார்ட்போன்!

மேலும் இது MediaTek Helio P22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை, இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டு உள்ளது.

மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 டிபி வரை மெமரி நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது. இது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் இது 13 மெகாபிக்சல் முதன்மைக் கேமராவையும், 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவையும் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது Wi-Fi, Bluetooth v5.0, NFC மற்றும் சார்ஜிங்கிற்காக USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் ஆஃபர்!

TechNews Tamil

மார்ச் மாதம் வெளியாகவுள்ள போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil