Mobile Uncategorised

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் எச்டி ப்ள்ஸ முழு விஷன் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் 48 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா முன்பக்கத்தில் 8எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப் சி போர்ட், வைபை, ப்ளூடூத் கொண்டதாக் உள்ளது.

Related posts

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

1000 ரூபாய் வரையிலான விலைக் குறைப்பினை அறிவித்த Asus போன்கள்!

TechNews Tamil