Mobile

LG K31 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வெளியிட்டது எல்ஜி நிறுவனம்!

 எல்ஜி நிறுவனம் தற்போது LG K31 ஸ்மாட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் எச்டி பிளஸ் கொண்டதாகவும், மேலும் 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது கைரேகை ஸ்கேனர் கொண்டதாக உள்ளது, மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6762 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

LG K31 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வெளியிட்டது எல்ஜி நிறுவனம்!

மேலும் இது ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6762 பிராசஸர் கொண்டு இயங்குவதாக உள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை சேமிப்பு வழங்குவதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்ட எஃப், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் எஃப் போன்றவற்றினையும், 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

வியட்நாமில் வெளியான ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது குவாண்டம் சிப் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது விவோ வி20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil