Mobile

அமெரிக்காவில் வெளியானது எல்ஜி நிறுவனத்தின் கே92 5ஜி ஸ்மார்ட்போன்!!

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் punch hole டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

அமெரிக்காவில் வெளியானது எல்ஜி நிறுவனத்தின் கே92 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது. எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் குவால்காம் அதிவேக சார்ஜிங்க் 4.0 ஆதரவையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப் சி, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

TechNews Tamil

மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5!!

TechNews Tamil

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் 108MP கேமரா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil