எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கே51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி கே51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது பின்புற கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ப்ராசஸர் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை எல்ஜி கே51 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை எல்ஜி கே51 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 32எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற 4 கேமராக்களைக் கொண்டுள்ளது.
மேலும் இது 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. எல்ஜி கே51 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் எல்டிஇ,என்எப்சி, ப்ளூடூத் வி5, கூகுள் லென்ஸ்,வைஃபை, கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.