Mobile

எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்!!

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் எல்ஜி கே42 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வசதி கொண்டதாகவும், 650MHz IMG PowerVR GE8320 GPU கொண்டதாகவும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம்,  64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் கிரே வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

ஐரோப்பாவில் வெளியாகியுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகும் ரியல்மீ X!!!

TechNews Tamil

நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள Honor V30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil