Gadgets

தென்கொரியாவில் அறிமுகமானது எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடல்!!

எல்ஜி நிறுவனம் தற்போது எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடலை தென்கொரியாவில் வெளியிட்டுள்ளது. இந்த எல்ஜி கிராம் 360 லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எல்ஜி கிராம் 360 லேப்டாப் எல்ஜி கிராம் 360 லேப்டாப் ஆனது 14 இன்ச் டிஸ்பிளே மற்றும் 16 இன்ச் டிஸ்பிளே என இரண்டு அளவு வகைகள் கொண்டுள்ளது.

மேலும் இது இன்டெல் டைகர் லேக் சிபியு மற்றும் விண்டோஸ் 10 ஹோம் வசதியைக் கொண்டுள்ளது.

தென்கொரியாவில் அறிமுகமானது எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடல்!!

எல்ஜி கிராம் 360 லேப்டாப் 11 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5-1135 ஜி 7 சிபியு மற்றும் இன்டெல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது 8GB of LPDDR4x ரேம் மற்றும் 256GB M.2 NVMe SSD வசதியினைக் கொண்டுள்ளது. எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடல் இரண்டு 2 வாட் ஸ்பீக்கர் வசதி மற்றும் எச்டி ஆடியோ மற்றும் DTS:X Ultra வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் வைஃபை 6, கிகாபிட் ஈதர்நெட், ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி 3.1 போர்ட், இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. 

பேட்டரி அளவாக 14 இன்ச் எல்ஜி கிராம் 360 லேப்டாப் 72Whr பேட்டரி மற்றும் 16 இன்ச் மாடல் 80Whr பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

செப்டம்பர் 9ல் அறிமுகமாகிறது Mi Charge Turbo!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ரெட்மி மேக்ஸ் 86 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!!

TechNews Tamil

ரூ. 16,999 விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!!

TechNews Tamil