எல்.ஜி. நிறுவனம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்த ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
1. எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 49,999
இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் விஷன் FHD மற்றும் OLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இது 6 ஜி.பி. ரேம் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 12 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. ஸ்டான்டர்டு சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 32 எம்.பி. செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிக்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது, மேலும் இதனுடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் போன்றவையும் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.