லெனோவா நிறுவனம் தற்போது அதன் லெனோவோ யோகா 6 லேப்டாப்பினை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த லெனோவோ யோகா 6 லேப்டாப் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.
லெனோவோ யோகா 6 லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் மல்டி டச் டிஸ்பிளே, 1,080 x1,920 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 300 nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டுள்ளது.
இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையினைக் கொண்டுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட AMD Ryzen 7 4700U பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவு எனக் கொண்டால் 16GB of DDR4 ரேம் மற்றும் ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் வசதி மற்றும் 1TB சேமிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

லெனோவோ யோகா 6 லேப்டாப் 60WHr பேட்டரி மற்றும் 18 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.
கேமரா எனக் கொண்டால் 720 பிக்சல் வெப் கேமராவினையும், ஆடியோ வசதியாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சம் எனக் கொண்டால் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக வைஃபை 6, புளூடூத் 5, இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் மற்றும் ஹெட்போன/மைக் காம்போ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.