இந்தியாவில் லெனோவா டேப் பி11 ப்ரோ இன்று வெளியாகி உள்ளது. இந்த லெனோவா டேப் பி11 ப்ரோ குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
லெனோவா டேப் பி11 ப்ரோ ஆனது 11.5 இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே, 2560 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 500nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டேப் பிராசஸர் என்று எடுத்துக் கொண்டால் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த டேப்லெட் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் 8600 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.