Gadgets

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் லெனோவா டேப் எம்8!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் லெனோவா டேப் எம்8 டேப்லெட் மாடலை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லெனோவா டேப் எம்8 டேப்லெட் மாடல் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இது லெனோவா டிபி 8506 எஃப் மாடல் எண்ணைக் கொண்டதாக உள்ளது. மேலும் லெனோவா டேப் எம்8 ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த மாடல் மீடியாடெக் MT8768WT பிராசஸர் உடன் ஆக்டோ-கோர் 4ஜி சிப்செட் வசதியைக் கொண்டதாக இருக்கலாம்.

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் லெனோவா டேப் எம்8!!

டிஸ்பிளேவினைப் பொறுத்தவரை 1280 x 800 பிக்சல் தீர்மானம் மற்றும் 8 இன்ச் பேனல் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

மேலும் லெனோவா டேப் எம்8 மாடல் மெமரி அளவாக 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை லெனோவா டேப் எம்8 மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாக இருக்கலாம்.

இந்த டேப் மாடல் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.

Related posts

தென்கொரியாவில் அறிமுகமானது எல்ஜி கிராம் 360 லேப்டாப் மாடல்!!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி!!

TechNews Tamil

காற்றுவாக்கில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த சியோமி!!

TechNews Tamil