லெனோவா நிறுவனம் லெனோவா லீஜியன் என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன் டூயல் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது 144Hz refresh rate, 19:5:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த லீஜியன் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு உடன் லீஜியன் ஒஎஸ் இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், போன்றவற்றினையும் முன்புறத்தில் 20எம்பி பாப் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன் ஆனது 2500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரிதிறன் கொண்டதாகவும் உள்ளது. மேலும் 90வாட் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை
5 ஜி, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ax, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ,
கியூசட்எஸ்எஸ் (எல் 1 + எல் 5), 2 எக்ஸ் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் என்.எஃப்.சி கொண்டதாகவும்
உள்ளது.