லெனோவா நிறுவனம் லெனோவா கே10 நோட் ஸ்மார்ட்போனை இன்று, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
லெனோவா கே10 நோட் 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி+
டிஸ்பிளேவையும், 19: 5: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 90 சதவீதம் ஸ்க்ரீன்-டு-பாடி
விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பு ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
லெனோவா கே10 நோட், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC மூலம் இயங்கக்கூடியது. 4050mAh பேட்டரி கொண்டுள்ளது.

கே10 நோட் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா + 5 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை கேமரா ஆகியவைகளைக் கொண்டுள்ளது.
முன்பக்க 16 மெகாபிக்சல் கேமரா ஒன்று உள்ளது. லெனோவா கே10 நோட் டால்பி ஆடியோ, பின்புற கைரேகை சென்சார்
மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றையும் கொண்டுள்ளது.