Mobile

அதிரடியாக கேமிங்க் போனை களமிறக்கிய லெனோவா நிறுவனம்!!

லெனோவா நிறுவனம் லீஜியன் போன் டூயல் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, கேமிங் பிரியர்களுக்கான இந்த ஸ்மார்ட்போன் குறித்துப் பார்க்கலாம். இந்த லீஜியன் போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த லெனோவா லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் அது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் சிப்செட் வசதி கொண்டதாகவும்,  அட்ரினோ 650ஜிபியு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் போன்றவற்றினையும், மேலும் 20எம்பி பாப் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

அதிரடியாக கேமிங்க் போனை களமிறக்கிய லெனோவா நிறுவனம்!!

மேலும் இந்த லெனோவா லீஜியன் போன் இரண்டு 2500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக, மொத்தமாக 5000எம்ஏஎச் பேட்டரிதிறன் கொண்டுள்ளது.

மேலும் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு செப்பு குழாய்களுடன் இரட்டை திரவ குளிரூட்டலைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ax, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, கியூசட்எஸ்எஸ் (எல் 1 + எல் 5), 2 எக்ஸ் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் என்.எஃப்.சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

களமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

எக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil