இந்தியாவில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா நிறுவனம் லெனோவா கே 12 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த லெனோவா கே 12 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
லெனோவா கே 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பர்பிள் மற்றும் க்ரெய் வண்ணங்களில் வெளியாகியுள்ளது. லெனோவா கே 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் 720×1,640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை எச்டி + ஐபிஎஸ் டிஸ்பிளே ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினை மைக்ரோ எஸ்டி கார்டு வரை 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூட்டியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ வைஃபை பி / ஜி / என் புளூடூத் 5.0 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாகவும், மேலும் 6,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.