லெனோவா நிறுவனத்தின் Lenovo K10 Plus இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவா K10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.10,999 ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் கொண்டு இயங்கும் தன்மையானது. இதன் டிஸ்ப்ளே 19:9 விகிதத்துடன் 6.22-inch HD+ (720×1520 பிக்சல்கள்) கொண்டுள்ளது.

இந்த போன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 SoC-ஆல் இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் எஃப் / 2.0 லென்ஸ், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சாருடன் வைடு லென்ஸ், 5 மெகாபிக்சல் கொண்ட மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2ஜிபி வரை நீட்டிக்கக்கூடியது. மேலும் இது 4,050 mAh பேட்டரி கொண்டுள்ளது.