Games

விரைவில் ஆன்லைன் கேம் பிரியர்களுக்கான லெஜியான் போன்!!

ஆன்லைன் கேம் விளையாடுவதில் மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் அடிமையாக இருந்து வருகின்றனர். ஆன்லைன் கேம் பிரியர்களுக்காக அவ்வப்போது மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது லெனோவா நிறுவனம் 16 ஜிபி ரேம் கொண்ட மொபைலை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் வெளியானதும் போதும், கேம் பிரியர்கள் படு குஷியில் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

விரைவில் ஆன்லைன் கேம் பிரியர்களுக்கான லெஜியான் போன்!!

அதாவது இந்த கேமிங்க் போன் ஆனது இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனிற்கு லெஜியான் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் கேமிங்க் பிரியர்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த போன் ஆன்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் ஆனது 16 ஜிபி ரேமைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த போன் ஸ்நாப் டிராகன் 865 எஸ்.ஓ.சி வசதி கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 512 ஜிபி. இன்பீல்டு மெமரி வசதி கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 20 மெகா பிக்சல் செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இந்த போன் 5,000 ஆம்ப் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் பத்து கோடிக்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி சாதனை..!

TechNews Tamil

கேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

TechNews Tamil

2ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கான ‘பப்ஜி லைட்’..!

TechNews Tamil