2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.
இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவியது. அதன்படி சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட 59 செயலிகளில் டிக் டாக் செயலியும் ஒன்றாகும்.

இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. அதாவது இந்த தடையானது 45 நாளில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அமெரிக்காவின் எந்த நிறுவனமும் பைட்டான்சுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க உள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் முறிந்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதுகுறித்த விஷயங்களை ஆராய்ந்து அமெரிக்காவில் டிக்டாக்கின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.