Mobile

இந்தோனோஷிய ஷாப்பிங்க் தளத்தில் கசிந்த ஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் விவரங்கள்!!

ஓப்போ ஏ 92 இன்னும் வெளியாகாத நிலையில், இந்தோனேசியாவின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

ஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 முழு எச்டி உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஹோல்-பஞ்ச் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகளைக் கொண்டிருக்கும். மேலும் இது, ஆண்ட்ராய்டு 10 உடன் கலர்ஓஎஸ் 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் சிப்செட் வசதி கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினை பின்புறத்திலும், 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினை முன்புறத்திலும் கொண்டுள்ளது.


இது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

Related posts

விவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil

மலிவு விலையில் அறிமுகமானது Moto G8 Play!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்!

TechNews Tamil