நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப்பை மாடலை இந்தியாவில் விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் மாடல்கள் குறித்து தற்போது கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் மாடல் கருப்பு வண்ணங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஆனது சிக்லெட் பாணி கீபோர்டு மற்றும் மல்டி-டச் கொண்ட பெரிய டச்பேட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
நோக்கியா ப்யூர் புக் எக்ஸ் 14 லேப்டாப் ஆனது இன்டெல் கோர் i5 செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது, மேலும் இது டால்பி Atmos சவுண்ட் தரத்துடனான டால்பி விஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது.
நோக்கியா லேப்டாப் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் யூ.எஸ்.பி 3.0 மற்றும் எச்.டி.எம்.ஐ போர்ட்டுகளினைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.