Mobile

மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்கள்!

மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணைய தளங்களில் கசிந்து உள்ளன.

மேலும் இந்த மோட்டோ ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஆனது முந்தைய மாடல் போன்றே தோற்றமளிக்கிறது. மேலும் அந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் காணப்பட்ட கோளாறுகளை தற்போது சரிசெய்துள்ளதாகவும், அதனால் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதி மேம்படுத்தி வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்கள்!

இந்த மோட்டோரோலா ரேசர் மாடல் ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்டி2071-4 என்ற மாடல் நம்பரினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 2845 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டு இயங்குவதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 ஒஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

Related posts

டூயல் கேமராவுடன் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்!

TechNews Tamil

அறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil