Mobile

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து லீக் ஆகிய தகவல்கள்!!

 மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த சில விவரங்கள் தற்போது லீக் ஆகியுள்ளன.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது. மேலும் இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமரா உட்பட டெலிஃபோட்டோ லென்ஸ் போன்றவற்றுடன் மொத்தமாக நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து லீக் ஆகிய தகவல்கள்!!

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1440×3216 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டதாக உள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 கலர்ஓஎஸ் கொண்டதாக உள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

5 கேமரா கொண்ட நோக்கியாவின் புது மாடல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடியான விலை குறைப்பு!!

TechNews Tamil

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்-ன் புதிய மதுரம் ப்ரீபெய்ட் திட்டம்

TechNews Tamil