இந்தியாவில் லாவா நிறுவனம் லாவா Z66 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த Lava Z66 ஸ்மார்ட்போன் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் ஆனது 6.08 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே 2.5D கர்வுட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டு இயங்குவதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபிஸ்டோரேஜ் எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி செல்பி கேமரா, 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ப்ளாஷ் டூயல் சிம் ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் வி 4.2 ஓடிஜி மைக்ரோ-யூ.எஸ்.பி கைரேகை ஸ்கேனர் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 3950 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.