லாவா நிறுவனம் தற்போது சீனாவில் லாவா இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் ஆம்பர் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இந்த லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் உடன் 1440×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஹெச்டி உடன் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இந்த லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வசதி கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வசதியையும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினையும் கொண்டுள்ளது.
இந்த லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஒஎஸ் இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 8 எம்பி பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது மேலும் முன்புறத்தில் 5 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 3100 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.