லாவா நிறுவனம் புதிய லாவா இசெட்53 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
1. லாவா இசெட்53 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.4,829
மிகவும் மலிவான விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ நிறுவனம் தள்ளுபடி மற்றும் டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது.

இந்த லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 0.4செகன்ட் பேஸ்அன்லாக் வசதி கொண்டுள்ளது, லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் 4120எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.