Gadgets

அசரவைக்கும் அம்சங்களுடன் லாவா இசட் 2 மேக்ஸ் டேப்லெட்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம் தற்போது லாவா இசட் 2 மேக்ஸ் டேப்லெட்டினை அறிமுகம் செய்துள்ளது. இந்த லாவா இசட் 2 மேக்ஸ் டேப்லெட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா இசட் 2 மேக்ஸ் டேப்லெட் 7 இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,640 பிக்சல்கள் தீர்மானத்துடனான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இது 258 பிபி பிக்சல் அடர்த்தியுடன் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ளது.

மெமரி அளவு எனக் கொண்டால் 2 ஜிபி டிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகத்துடன் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் கொண்டுள்ளது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை கூடுதல் அம்சத்தைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 10 கோ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் கேமரா என்னும்போது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் நாட்ச் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொள்ளும்போது வைஃபை, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டும், பேட்டரி அளவாக 6,000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டுள்ளது.

Related posts

விற்பனையைத் தொடங்கிய Mi Band 4!!

TechNews Tamil

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் குறித்து கசிந்துள்ள தகவல்!!

TechNews Tamil

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

TechNews Tamil