மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம் தற்போது லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த லாவா பீயு ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.08′ இன்ச் 1560 x 720 பிக்சல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன் ஆனது 1.6GHz ஆக்டா கோர் IMG8322 GPU 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது.

மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் எல்இடி ஃபிளாஷ், 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4G VoLTE Wi-Fi 802.11 b / g / n புளூடூத் 4.2 GPS GLONASS டூயல் சிம் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் கொண்டதாக உள்ளது.
மேலும் லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன் ஆனது 4060 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.