Apps

இண்டர்நெட் வேண்டாம்.. ஈசியா பண பரிமாற்றம் செய்ய உதவும் லாவா பே சேவை!

இந்திய மொபைல் போன் நிறுவனமான லாவா நிறுவனம் தற்போது பயனர்களைக் கவரும் வகையில் இணையதள வசதி இல்லாதபோதும் பண பரிமாற்றம் செய்யும் ஒரு சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவைக்கு லாவா பே சேவை என்று பெயர்.

பொதுவாக பணப்பரிமாற்றும் செய்யும் செயலியானது, இணையதள வசதி இருந்தால் மட்டுமே செயல்படக் கூடியதாக இருக்கும். ஆனால் இதனால் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இந்த பணப்பரிமாற்ற வசதியினை நம்மால் பயன்படுத்த முடிவதில்லை.

இணையதள வசதி இல்லாத வகையில் உள்ள செயலிகளை எந்தவொரு இடத்திலும்  பயன்படுத்த முடியும். அதாவது லாவா நிறுவனம் அதன் ஃபீச்சர் போன் மாடல்களில் இந்த சேவையினை பிரீ இன்ஸ்டால் செய்து வெளியிடும் என்று லாவா அறிவித்து உள்ளது.

இண்டர்நெட் வேண்டாம்.. ஈசியா பண பரிமாற்றம் செய்ய உதவும் லாவா பே சேவை!

பழைய மொபைல் போன்களில் இந்த சேவையினைப் பெற விரும்பினால், லாவா சர்வீஸ் சென்டர்களில் உள்ள பணியார்களிடம் கொடுத்து இந்த புதிய செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த லாவா பே செயலியானது கூகுள் பே, பேடிஎம் போன்று மிகவும் எளிமையான முறையில் பண அனுப்பும் வகையிலான வசதியினைக் கொண்டுள்ளது.

வங்கிக் கணக்கில் உள்ள அக்கவுண்ட் இருப்புத் தொகை குறித்த விவரங்களைப் பெற, சம்பந்தப்பட வங்கி கிளையினை அணுகி, அந்த ஆப்சனை எனேபிள் செய்து கொள்ள வேண்டும்.

Related posts

இந்தப் பொருட்கள் மட்டும் தான் கிடைக்கும்.. பட்டியலை வெளியிட்ட அமேசான்!!

TechNews Tamil

பல சாதனங்களில் ஒரே வாட்ஸ் ஆப் அக்கௌண்ட்டை பயன்படுத்தலாம்!!

TechNews Tamil

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil