ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஆகிய இரண்டு புதிய நான்கு கேமரா ஸ்மார்ட்போன்களை ரியல்மீ புதியதாக அறிமுகப்படுத்தியிருந்தது.
ரியல்மீ XT எனப்படும் 64 மெகாபிக்சல் கேமராவை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை ரியல்மீ நிறுவனம், அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் மக்கள் பேரார்வத்தில் உள்ளனர்.

ரியல்மின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி புதிய ஸ்மார்ட்போன் தொடரின் அறிமுகத்தை டீசர் மூலம் வெளியிட்டுள்ளதால், மீடியாடெக்கின் கேமிங் சென்ட்ரிக் ஹீலியோ ஜி 90 மற்றும் ஹீலியோ ஜி 90 டி சிப்செட்களால் இயக்கப்படும் பல ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.
அடுத்த வாரம் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனில் அதிக அளவிலான சிறப்பம்சங்கள் உள்ளதாகவும், அது வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் இருக்கும் என்றும் ரியல்மீ நிறுவனத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அறிமுக சலுகையாக 3000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்பதிவு என்று துவங்கும் என்று வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.