சீனாவில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது, அப்போது அந்த வைரஸ் இந்த அளவில் உலக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என யாரும் நினைக்கவில்லை. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் தங்களது இயல்பு வாழ்க்கையினை இழந்துள்ளன.
சில நாடுகளுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்றுகூட கூறலாம். இன்னும் பல நாடுகள் இயல்பு நிலை எப்போது என்ற கனவோடு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் அடுத்து ஒரு வைரஸ் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, அந்தவகையில் தற்போது சீனாவின் சீனாவின் பீஜிங் மாகாணத்தில் கொரோனா போன்ற வடிவத்தில் பெரிய உருவத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

சீனாவில் ஆலங்கட்டி மழை வடிவில் மீண்டும் தலைகாட்டியுள்ள கொரோனாவினை சிலர் அதிசய நிகழ்வாகக் கருதினாலும், சிலர் இதனால் பீதியாகிப் போய் உள்ளனர்.
கோடை காலத்தில் பெய்துள்ள இந்த கொரோனா வடிவ ஆலங்கட்டி மழையினை பீஜிங் பகுதி மக்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் அமெரிக்காவில் பொழிந்த கொரோனா வைரஸ் வடிவிலான மழை அங்கு பீதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வானியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.