ரூ.9.07 கோடிக்கு விற்பனையான லேப்டாப்!
Gadgets

ரூ.9.07 கோடிக்கு விற்பனையான லேப்டாப்!

ஒரு லேப்டாப், ஒரு சாதாரன லேப்டாப், வெறுமென விண்டோஸ் XP அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு லேப்டாப், வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்ட ஒரு லேப்டாப், உலகில் ரூ.7 லட்சம் கோடி வரையிலான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட ‘The Persistence of Chaos’ என பெயர் பெற்றிருக்கும் இந்த லேப்டாப் அந்த திறனை கொண்டுள்ளது. 

மிகச்சிறந்த கலைப்படைப்புகளில் ஒன்று என கருதப்படும் இந்த லேப்டாப், 2008-ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் NC10 லேப்டாப்.

வெறும் 10.2 இன்ச் திரை, 14GB மெமரி, விண்டோஸ் XP அமைப்பில் செயல்படக்கூடிய இந்த லேப்டாப்பில் 6 அபாயகரமான வைரஸ்கள் உட்புகுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.9.07 கோடிக்கு விற்பனையான லேப்டாப்!

இதனை உருவாக்கியவர், க்யோ ஓ டாங்(Guo O Dong). சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.

இப்படியான நிலையில் இருக்க, இந்த லேப்டாப் ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தின் முடிவில், வெறும் வின்டோஸ் XP அமைப்பில் செயல்படக்கூடிய இந்த 10.5-இன்ச் சாம்சங் லேப்டாப் ரூபாய் 9.07 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 

இந்த லேப்டாப்பில் உள்ள வைரஸ்களின் தாக்கம் என்பது இந்த அளவு மிக சிறியதாக இருந்தது இல்லை. மொத்தம் ஆறு விதமான வைரஸ்களை கொண்டுள்ளது இந்த லேப்டாப். ஐ லவ் யூ (ILOVEYOU), மை டூம் (MyDoom), சோ பிக் (SoBig), வான்ன கிரை (WannaCry), டார்க் டக்கீலா (Dark Tequila), ப்ளாக் எனர்ஜி (BlackEnergy), இவை தான் அந்த ஆறு வைரஸ்கள்.

மிகவும் அழகான பெயர்களை கொண்ட இந்த ஆறு வைரஸ்களின் தாக்கம் என்பது அழகானதாக இருக்கவில்லை. இதுவரை உலகில் ரூ.7 லட்சம் கோடி வரையிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்களின் கூட்டணி. 

Related posts

ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஓப்போ என்கோ டபிள்யூ11 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

TechNews Tamil

ஒரேநேரத்தில் அறிமுகமான இரண்டு சாம்சங் லேப்டாப் மாடல்கள்!!

TechNews Tamil

99 ரூபாயில் ஆப்பிள் டிவி+ சந்தா!!

TechNews Tamil