Samsung Galaxy M31s ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 30 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா, குவாட் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் டேக் ஆதரவு கொண்டதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போன் மைக்ரோ சைட் வசதியினைக் கொண்டதாக உள்ளது. இது முழு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் உடன் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F கொண்டதாகவும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது, ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்ளடக்கத்துடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி நீட்டிக்கக்கூடியதாக உள்ளது.